there is fire in two places at same time in tamilnadu

ஒரே நாளில் அடுத்தடுத்த தீ ....தமிழகத்தில் பரபரப்பு...

கோபிசெட்டிபாளையம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மூணாம்பள்ளி அருகே செயல்பட்டுவரும் பட்டாசு தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 க்கும் மேற்பட்டவா்கள் படுகாயம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதே போன்று,ஓசூர் அருகே கெலமங்கலம் செல்லும் வழியிலுள்ள ஏபியம் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீப்பற்றி எரிந்தது.பின்னர் மூன்று தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீப்பற்றி எறிந்த இடங்களை சுற்றி உள்ள பகுதிகளில் பெரும் புகை மண்டலம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக பலரும் சுவாசிக்க கூட சிரமப்படும் நிலை உருவாகி உள்ளது 

ஒரே நாளில் இரண்டு அடுத்தடுத்த இடங்களில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.மேலும் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது,எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்..? அவ்வளவு பொருட்கள் சேதமடைந்தன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.