There is cabinet meeting on day after tomorrow to key decision about the political situation

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் எடப்பாடி பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.

சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் என எடப்பாடி அறிவித்துள்ளார்.

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தோப்பு வெங்கடாசலம் அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் விரைவில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

எம்.எல்.ஏக்களின் இத்தகைய செயல்கள் எடப்பாடிக்கு மேலும் நெருக்கடியாகியுள்ளது.

இதனிடையே தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.வுடன் கூட்டணி குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அமைச்சர்களுடனும் எம்.பி.க்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும், நாளை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், முக்கயமான 3 அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார் எடப்பாடி.

இதையடுத்து நாளை மறுநாள் 3 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் நிலவரம், தமிழக பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.