தேனி அருகே கந்துவட்டி தொல்லையால் ஏலக்காய் விவசாயி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுர பகுதியைச் சேர்ந்த விவசாயி சதீஸ்குமார். தனக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தை விரிவுப்படுத்துவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் மற்றும் சுப்பையா என்பவரிடம் தலா 1.5 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். 

இந்நிலையில் அதிக வட்டி கேட்டு இருவரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கடனைத் திருப்பித் தர முடியவில்லை என்றால் நிலத்தை எழுதி தருமாறும் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஸ்குமார் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை கொண்ட விவசாயி சதீஸ்குமாருக்கு முருகேஸ்வரி (30) என்ற மனைவியும் மிர்சன் (8) யஸ்வந்த் (2) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்கொலைக்கு காரணமான இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.