கட்டுக்கட்டாக லஞ்ச பணம்..! வீடியோவில் சிக்கிய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர்.! தமிழக அரசு அதிரடி நடிவடிக்கை
கேண்டீனில் உள்ள குடிநீர் இணைப்பை மீண்டும் வழங்க கட்டுக்கட்டாக லஞ்சமத் வாங்கிய தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கேண்டீன் குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு பகுதியில் இருந்து புற நோயாளிகள், உள் நோயாளிகள் என தினந்தோறும் ஆயிரக்கனக்காணோர் சிகிச்சைக்காக வருகின்றனர். அதே போல மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நான் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 10ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். நோயாளிகள் மற்றும் மாணவ, மாணவிகள் வசிதிக்காக மருத்துவ கல்லூரி வளாகத்தில் கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேண்டீனை மாரிச்சாமி என்பவர் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் கேண்டீனில் குடிநீர் இணைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாரிச்சாமி கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவ கல்லூரி டீன்
அதற்கு குடிநீர் இணைப்பு மீண்டும் வழக்க 20 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். குடிநீர் இல்லாமல் கேண்டீன் நடத்த முடியாத நிலைக்கு மாரிச்சாமி தள்ளப்பட்டதால் பணத்தை கொடுக்க முற்பட்டுள்ளார். அதே நேரத்தில் பணம் கொடுப்பதை வீடியோவாக பதிவும் செய்துள்ளார். இதனையடுத்து இந்த வீடியோ காட்சிகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இந்த வீடியோ தொடர்பாக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அடுத்த கட்டமாக மீடியாக்களில் வீடியோவை மாரிச்சாம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வீடியோவில் சிக்கிய தேனி மருத்துவ கல்லூரி முதல்வர்
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் திரு. மாரிசாமி அவர்களிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களை நேரில் சென்று உணவக உரிமையாளரிடம் நடைபெற்ற ஊடகத்தில் வெளியான செய்தி உண்மைதானா?
சஸ்பெண்ட் செய்து உத்தரவு
என்று விசாரணை நடத்த மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் உத்தரவிட்டார்கள். விசாரணையின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரியவந்த காரணத்தினால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்