கட்டுக் கட்டாக லஞ்சம்...! தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தின் ஷாக்கிங் வீடியோ
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கேண்டீனில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இணைப்பு கொடுக்க 10 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கியதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேண்டீன் குடிநீர் துண்டிப்பு- லஞ்சம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் பல்வேறு உடல்நிலை பிரச்சனைக்காக உள் நோயாளிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ கல்லூரி மாணவர்கள், மாணவிகள், மருத்துவர்கள். நோயாளிகளின் உறவினர்கள் என தினந்தோறும் சுமார் 10ஆயிரம் பேர் மருத்துவமன மனைக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கேன்டீன்களில் உள்ள குடிநீர் குழாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கட்டுக்கட்டாக லஞ்சம்
இது தொடர்பாக கேன்டீன் நடத்தி வரும் மாரிச்சாமி என்பவர் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அப்போது குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மீனாட்சி சுந்தரம் கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் அமைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோவில் குடிநீர் நிறுத்தப்பட்டதால், தன்னால் கேன்டீன் நடத்த முடியவில்லையென்றும், குடிநீர் இல்லாமல் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் சிரம்ப்படுவதாக தெரிவிக்கிறார்.
கல்லூரி முதல்வரின் வீடியோ
மேலும் நீங்கள் தான் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாரிச்சாமி கல்லூரி முதல்வரிடம் பேசுவது போல் காட்சிகள் உள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாரிச்சாமி முதல் தவணையாக ரூபாய் 6.5 லட்சம் ரூபாயை கொடுக்கிறார். இதே போல மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில் அதே வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்கும் மாரிச்சாமி சென்று கட்டு கட்டாக பணம் வழங்கி உள்ளார். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளது. கேன்டீன் நடத்தி வரும் மாரிச்சாமியிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ரூபாய் 16 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதையும் படியுங்கள்
ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் திடீர் கைது..! வெளியான பகீர் தகவல்