சென்னை ஐஸ் ஹவுசில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளையில் தப்பி ஓடிய கொள்ளையர்கள் சில மணி நேரத்தில் பிடிபட்டனர்.

கொள்ளைக்கு பின்னால் பெரிய கும்பலே இயங்குவது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐஸ் ஹவுஸ் ஜானிஜான் கான் சாலையில் அடகு கடைகாரர் வீட்டுக்குள் புகுந்த 4 வடமாநில கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.

இதை பார்த்த வேலைக்காரி கூச்சலிட்டதில் பொதுமக்கள் திரண்டனர்.

இதை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.. ஒருவன் மட்டும் பிடிபட்டான்.

அவனிடமிருந்து துப்பாக்கிகள், அரிவாள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

பிடிபட்ட கொள்ளையன் ரவிகாந்த் சிங் உடனடியாக போலீஸ் உயரதிகாரிகளின் விசாரணைக்கு கொண்டு செல்லபட்டான்.

அவனிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய கொள்ளையர்கள் குறித்த தகவல் கிடைத்தது.

கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் மறைந்திருக்கும் தகவல் கிடைத்து போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று மற்ற மூவரையும் மடக்கி பிடித்தனர்.

4 கொள்ளைக்கார்களையும் விசாரனைக்காக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் கொண்டு வருகின்றனர்.

கொள்ளையர்கள் நால்வரும் பயன்படுத்திய துப்பாகிகள், தோட்டாக்கள், அரிவாள் போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நான்கு பேர் தவிர ஒரு பெரிய கூட்டமே செயலபடுவது தெரியவந்தது.

விசாரணைக்கு பின் மேலும் சிலர் கைது செய்யப்படலாம்.

டெயில் பீஸ் : குழப்பமோ குழப்பம் - பிடிப்பட்ட கொள்ளையன் காட்டிய அடையாளத்தின் படி மூட்ன்று பேரை போலீசார் பிடித்து வந்தனர்.

பிடிபட்ட அவர்களை வேலைக்காரி வனிதாவிடம் அடையாளம் காட்ட சொன்ன போது இவர்கள் மூன்று பேர் வரவே இல்லையென்று சொல்லிவிட்டார். இதனால் குழப்படைந்த போலீசார், மூவரையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விட்டு கொள்ளையடிக்க வந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்டவன் இந்த மூன்று பேரை ஏன் காண்பிக்க வேண்டும் என்ற குழப்பம் எழுந்துள்ளது.