Theater owners have decided in 6 counties including Madurai to close the first theaters of Deepavali after canceling the entertainment tax on theaters.

திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை ரத்து செய்யாததையடுத்து தீபாவளி முதல் திரையரங்குகளை மூட மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

டிக்கெட் விலையோடு சேர்த்து 18% ஜிஎஸ்டி வரியும் கேளிக்கை வரியும் சேர்ந்ததால் டிக்கட்கள் விலை மிகவும் உயர்ந்தது. 

இதனால் பொதுமக்கள் திரையரங்கிற்கு வருவது குறையும் எனவும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தினர். 

மேலும் இதை கண்டித்து திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கமும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் தமிழக அரசிடம் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரிக்கை வைத்து திரையரங்குகளை திறந்தனர். 

இந்நிலையில், தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி கடந்த 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 30% சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிற மொழி படங்களுக்கு 20 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் கேளிக்கைவரி விதிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை ரத்து செய்யாததையடுத்து தீபாவளி முதல் திரையரங்குகளை மூட மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.