சென்னை வடபழனியை சேர்ந்த வனஜா (வயது 15) ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ). இவர் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் வன்னியர் தெருவை சேர்ந்த பாலாஜி (20) என்ற வாலிபரிடம் அடிக்கடி பேசி வந்திருக்கிறார் இது நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. பாலாஜி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வனஜா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வனஜா வீட்டில் யாரும் இல்லாததால் அந்த நேரத்தில் பாலாஜி வனஜா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில்  வனஜாவின் தம்பி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் சகோதரி இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.

தனது சகோதரியை வீடு முழுவதும் தேடி விட்டு, கடைசியாக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, மயங்கிய நிலையில் அடைகள் விலகிய நிலையில் சகோதரி இந்துமதி கிடந்தார். பாலாஜி அருகில் இருந்தார். இதைபார்த்த சகோதரர் சத்தம் போட்டபடி பாலாஜியை சரமாரியாக அடித்துள்ளார். பிறகு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாலாஜியை சுற்றிவளைத்து பிடித்து உதைத்தனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில். சம்பவ இடத்துக்கு வந்த மகளிர் போலீசார் அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் மக்களிடம் இருந்து பாலாஜியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மயக்கம் தெளிந்த பள்ளி மாணவி வனஜாவிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, இந்துமதி எங்கள் வீட்டிற்கு வந்த பாலாஜியிடம் பேசி கொண்டிருந்தேன். தலை வலிப்பதாக அவரிடம் கூறினேன். உடனே பாலாஜி மாத்திரை வாங்கி வந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு எனக்கு  என்ன நடந்தது என்று தெரியவில்லை என கண்ணீருடன் கூறினார். இதையடுத்து போலீசார் பாலாஜி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.