வேலை பறிபோன விரக்தி.... நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்!
திருப்பூரில் வேலை பறிபோனதால் மனமுடைந்த இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (18). இவர் திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தங்கி கடந்த 3 ஆண்டுகளாக உணவகத்தில் வேலை செய்து வருகிறார்.
திருப்பூரில் வேலை பறிபோனதால் மனமுடைந்த இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (18). இவர் திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தங்கி கடந்த 3 ஆண்டுகளாக உணவகத்தில் வேலை செய்து வருகிறார். தான் பணியாற்றி வந்த உணவகத்தில் அவ்வப்போது திருட்டுச் செயல்களில் அருள்பிரகாஷ் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனை அறிந்த ஹோட்டலின் உரிமையாளர் பலமுறை எச்சரித்தார். இந்நிலையில் உணவகத்தில் வருமானம் போதிய அளவில் இல்லாததால் கடையை மூடப்போவதாகவும், வேறு வேலை பார்த்துக் கொள்ளுமாறும் உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக தங்கி வேலை பார்த்து வந்த உணவகத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதால் பெரும் விரக்தியும், வேதனையும் அடைந்தார்.
இந்நிலையில் அவர் வசித்து வந்த குமார்நகர் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.