Asianet News TamilAsianet News Tamil

சினிமா நிறுவனத்துக்கு 'ஷாக்' கொடுத்த இளம் பெண்! அதிர்ச்சியில் திரையுலகம்!

The woman who made money laundering at the cinema company
The woman who made money laundering at the cinema company
Author
First Published Mar 5, 2018, 4:52 PM IST


சினிமா தயாரிப்புகளை விளம்பரம் செய்து தருவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த அலமேலு என்பவர் 28,77,596 ரூபாய் ஏமாற்றி உள்ளார். இதையடுத்து, சினிமா தயாரிப்பு நிறுவனம் அலமேலு மீது போலீசில் புகார் கொடுத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நான் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். தி.நகரைச் சேர்ந்த அலமேலு என்பவர் எங்கள் நிறுவனத்தை அணுகி, எங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்வதாக
கூறினார்.

அவர் கூறியதை அடுத்து, அவர் கேட்ட தொகையை நாங்கள் கொடுத்தோம். ஆனால், அலமேலு, போலியாக பில் தயாரித்து எங்கள் நிறுவனத்தை ஏமாற்றி விட்டார். அலமேலு, ரூ,28,77,596 ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, எங்களுக்கு அலமேலு மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் மகேஷ் கூறியுள்ளார்.

The woman who made money laundering at the cinema company

இது குறித்து மகேஷ், செய்தியாளர்களிடம் பேசியபோது, எங்களது சினிமா தயாரிப்புகளை விளம்பரம் செய்ய அலமேலுவின் விளம்பர நிறுவனத்திடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தினோம். அதற்கான பில்லை எங்களிடம் அந்த நிறவனம் கொடுத்தது. அவர் கொடுத்த அந்த பில்களின் மீது எங்களுக்கு சந்தேகம்
ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, அலமேலுவின் நிறுவனம் கொடுத்த பில் போலி என்பது தெரியவந்தது. எனவே, அவர் மீது புகார் கொடுத்துள்ளோம். போலி பில் மூலம் லட்சக்கணக்கில் எங்களை அலமேலு ஏமாற்றி விட்டார் என்று கூறினார்.

மகேஷின் புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் அலமேலு மீது மோசடி, நம்பிக்கை வைத்து ஏமாற்றுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அலமேலுவை தேடி
அவரது வீடு மற்றும் அலுவலகம் சென்றோம் ஆனால் அவர் அங்கு இல்லை. அலமேலுவை தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios