விழுப்புரம் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிராக்டர் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தென்பொன்பரப்பியில் பயணிகள் ரயில், டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விருத்தாச்சலத்தில் இருந்து பயணிகள் ரயில், சேலம் சென்றது. 

தென்பொன்பரப்பு அருகே, ஆளில்லா ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது. இந்த ரயில்வே கேட்டை, டிராக்டர் ஒன்று கடக்க முயன்றது. அப்போது சேலம் நோக்கி சென்ற பயணிகள் ரயில், திடீரென டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த ரயில் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், டிராக்டர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ரயில் சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.