The time when the Kumbabhishekam for Nellaiyappar was dangerous
கும்பாபிஷேகம் நடந்தால் கோபுரத்தின் உச்சியில் நின்று ஐய்யர்வாள் எல்லார் தலையிலும் தீர்த்தம் தெளிப்பா! ஷேமம், சந்தோஷம். ஆனால் இங்கே என்னாடான்னா கும்பாபிஷேகத்துக்கு பின்னாடி குபீர்ன்னு பஞ்சாயத்தை கிளப்புறாளே!....என்கிற டைப்பில் ஒரு பகீர் தகவல் இது.

திருநெல்வேலியின் நெல்லையப்பர் ஆலயம் செம்ம பிரசித்தி பெற்ற ஆலயம். நேற்று இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நாள், நேரம் எதுவும் சரியில்லை, இதனால் பல கேடுகள் வந்து சேரும் என்று ஜோதிடர்கள் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இதனால் அலறிக் கிடக்கிறது அண்ணாச்சிகள் தேசம்.
எப்படி ஜோதிடர்கள் சொல்வதுதான் என்ன?...”இந்த கும்பாபிஷேகம் 27-ம் தேதி காலையில ஒன்பதரை மணியிலிருந்து பத்து இருபத்தஞ்சுக்குள் நடத்தி முடிக்கப்பட்டிருக்குது. ஆனால் முதலில் குறித்த நேரமோ காலை 4.41 முதல் 5.11 வரை எனும் பிரம்ம முகூர்த்தம். இந்த நேரமாற்றமே பெரும் குழப்பமான ஒரு சம்பவம்.
மேலும் இந்த கும்பாபிஷேகத்தை மீன லக்னத்தில் செய்திருக்கிறார்கள். ஆனால் பொதுவாக எந்த கோயிலிலும் இந்த லக்னத்தில் கும்பாபிஷேகம் செய்ய மாட்டார்கள். திருநெல்வேலியில் வெயில் உச்சத்தில் நிற்கும் அக்னி நட்சத்திரம் போன்ற சமயத்தில் கும்பாபிஷேகம் செய்ததும் சரியல்ல.
கும்பாபிஷேகம் செய்யப்படும் நாளில் நேத்திரம் மற்றும் ஜீவனம் இருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாத நேரத்தில் இந்த கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. இது நாடாள்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அநேக பெண்களின் தாலிக்கு துர் சம்பவங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்திருப்பது மிதுன லக்னத்தில். இதனால் ராஜாங்கத்துக்கும் கேடு, பிராந்திய மக்களுக்கும் கேடு.” என்று போட்டுப் பொரிந்திருக்கிறார்கள்.
கும்பாபிஷேகத்துக்கு பின் கிளம்பியிர்க்கும் இந்த குபீர் எச்சரிக்கையால் ‘எப்ப என்ன நடக்குமுண்ணே தெரியலையேண்ணே! ஏ பயமால்லாய்யா இருக்குது’ என்று அரண்டு கிடக்கிறது அண்ணாச்சிகளின் ஊரான திருநெல்வேலி.
