Asianet News TamilAsianet News Tamil

கோயில் மண்டபம் இடிந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் - முதலமைச்சர் அதிரடி உத்தரவு...!

The Thiruchendur Subramanya Swamy temple was destroyed by the devotees of the temple.
The Thiruchendur Subramanya Swamy temple was destroyed by the devotees of the temple.
Author
First Published Dec 14, 2017, 3:01 PM IST


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பரிகார மண்டபம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 10 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். 

தற்போது கார்த்திகை மாதம் என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் முருகன்கோயிலின் பிரகார மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. வள்ளி குகைக்கு அருகே உள்ள இந்த பிரகார மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. இதில் பேச்சியம்மாள் என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். 

இந்நிலையில், உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

மேலும் காயமடைந்த கந்தசாமி, மற்றும் ஆறுமுகத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் உள்ள கட்டட உறுதி தன்மையை ஆராய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios