திரையரங்கங்களில் படங்கள் திரையிடப்படும் நேரத்தை இரவு 2 மணி வரை நீட்டிக்கனும் - திரையரங்க உரிமையாளர்
திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் எனவும், திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும் 8 சதவீத local body tax - ஐ நீக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை திரைப்பட தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கூட்டாக சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வரோடு சந்திப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் , தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் , தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடரந்து தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய அவர்கள், திரையரங்கங்களில் 100 ரூபாய் வரையிலான டிக்கெட்களுக்கு 12 சதவீத வரியும் , 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும் ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்படுகின்றது. இவற்றுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசால் 8 விழுக்காடு வரி Local body tax (உள்ளாட்சி வரி) எனும் பெயரில் விதிக்கப்படுகின்றது .
தியேட்டர் இயங்கும் நேரம் நீட்டிக்க வேண்டும்
கடந்த ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த 8 விழுக்காடு வரியை நீக்க வேண்டுமென தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். இந்த 8 விழுக்காடு வரி குறைக்கப்பட்டால் டிக்கெட் விலையும் 100 ரூபாய்க்கு 8 ரூபாய் குறையும் என தெரிவித்தனர்.மேலும் திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் . தமிழ்நாட்டில் முன்பு 4000 திரையரங்குகள் இருந்த நிலையில் தற்போது ஆயிரம் திரையரங்கங்களாக குறைந்துவிட்டது. ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட திரையரங்குகளில் கூட தற்போது 100 அல்லது 150 பார்வையாளர்கள்தான் வருகின்றனர் . எனவே ஒரே திரையுடன் உள்ள பெரிய திரையரங்கத்தை,
தமிழ் பெயர் படங்களுக்கு மானியம்
நான்கு திரைகள் வரை கொண்ட திரையரங்கமாக மாற்ற பொதுப்பணித்துறை சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்து அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு ஒரு திரையை 3 அல்லது 4 திரைகளாக மாற்றினால் சிறுபட்ஜெட் படங்களை திரையிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என யோசனை தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியமும் , வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டது. பிறகு வந்த ஆட்சியில் அது நீக்கப்பட்டது , எனவே தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம் , வரிச்தலுகையை மீண்டும் வழங்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் இதனைபரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்