Asianet News TamilAsianet News Tamil

ஜவுளி உற்பத்தி நிறுத்தம்.. 15 நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது.. ஒரு நாளைக்கு ரூ.100கோடி இழப்பு..

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரக் கோரி கோவை, திருப்பூரில் இன்று முதல் ஜூன் 5 தேதி வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் முழுமையான வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்று ரூ100 கோடி அளவுக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

The textile industry start 15 days strike from today
Author
Tamil Nadu, First Published May 22, 2022, 10:54 AM IST

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரக் கோரி கோவை, திருப்பூரில் இன்று முதல் ஜூன் 5 தேதி வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் முழுமையான வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்று ரூ100 கோடி அளவுக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

15 நாள் வேலை நிறுத்தம்: 

திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்படுகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் கொடுத்து அதை துணிகளாக பெற்று, விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வரலாறு காணாதா வகையில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்ந்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2 லட்சம் விசைதறிகள் இயங்காது:

இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே ஜவுளி உறத்தியாளர்கள் சார்பில் 50 சதவீத உற்பத்தி வேலை நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம், 16, 17 தேதிகளில் முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயர்வாகாத காரணத்தால் 15 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.  

நாளொன்று 100 கோடி ரூபாய் இழப்பு:

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.100 கோடி க்கு ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளகள் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடைவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: சமையல் எரிவாயு மானியம் ரூ.200...! அனைத்து மக்களுக்கும் பயனளிக்காது... ராமதாஸ் விமர்சனம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios