Asianet News TamilAsianet News Tamil

வறண்ட மேட்டூர் அணை.! டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கான சிறப்பு திட்டம் அறிவிப்பு.! என்ன என்ன தெரியுமா?

டெல்டா மாவட்டங்களில் வேளாண்பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 

The Tamil Nadu government has released a special package scheme for the cultivation of Delta Kuruai KAK
Author
First Published Jun 14, 2024, 12:31 PM IST | Last Updated Jun 14, 2024, 12:31 PM IST

வறண்டு கிடக்கும் மேட்டூர்

மேட்டூர் அணை திறக்க முடியாக நிலையில், குறைவை சாகுபடிக்கான வேளாண் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை நீர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜூன் 12ஆம் நாள் திறந்து விடப்படுவது மரபு. எதிர்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலந்தாழ்த்தி இருப்பதால் இந்த ஆண்டு 2024 மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால்,

டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்து விட கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.  இது மிகுந்த மனவேதனையை தந்தாலும் வேளாண்மை மக்களின் நலனை முன்நிறுத்தி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதி கீழ்க்கண்டவாறு வழங்கி  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

Student : கல்லூரி மாணவர்களுக்கு 1000 ரூபாய்..! எப்போது தெரியுமா.? முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு

1,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு. 2.000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும். நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும். நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 இலட்சம் வழங்கப்படும். அதோடு, துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, ஏக்கருக்கு 250 ருபாய் வீதம். 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும். 25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

மானியத்தில் விதைகள்

பயறு வகைப் பயிர்களை 10.000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 50சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்கவும். ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியும், பயறுவகைப் பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கருக்கு நுண்ணூட்டச்சத்து வழங்கிட ரூபாய் 20 இலட்சம் நிதியும் வழங்கப்படும்.வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை உழுவை. களையெடுக்கும் கருவி. விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை. சாகுபடிக்கலப்பை, பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி. ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்கிட மானியமாகரூ.7 கோடியே 52 இலட்சம் நிதி வழங்கப்படும்.

Anbumani : ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை.! திமுக அரசை விளாசும் அன்புமணி

வேலை இழப்பினை ஈடுகட்ட திட்டம்

டெல்டா மாவட்டங்களில் வேளாண்பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.மேற்கண்டவாறு. அரசு நிதியிலிருந்து நிதி பெற்றும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் என வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios