கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபட்டு வந்த சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 16 அரசு துறை செயலாளர்கள் மாற்றப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள்-செயலர்கள் மோதல்
திமுக அரசு பதவியேற்றதும் அரசு துறை செயலாளர்கள் மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக அமைச்சர்களோடு அரசு துறை செயலாளர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அரசு செயலாளர்கள் டிரான்ஸ்பருக்காக காத்திருந்தனர்.இந்தநிலையில் தற்போது தமிழக அரசு 16 அரசு துறை செயலாளர்கள் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில்,
1. கே.பணீந்திரரெட்டி-வணிகவரித்துறையராக இருந்தவர் உள்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
உள்துறை
2. எஸ்.கே.பிரபாகர் - உள்துறை செயலாளராக இருந்தவர் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
3. முகமது நசிமுத்தின்-, கூட்டுறவு மற்றும் உணவு செயலராக இருந்தவர் தொழிலாளர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. ஜெ.ராதாகிருஷ்ணன்- சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
5. பிரதீப் யாதவ்- சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனராக இருந்தவர் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. தீரஜ்குமார் - நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலர் ஆக இருந்தவர் வணிகவரி்ததுறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
7. பி.செந்தில்குமார் - சுகாதாரத்துறை சிறப்பு அலுவலராக இருந்தவர் சுகாதாரத்துறை செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்
8. ஆனந்தகுமார்- விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலராக இருந்தவர் மாற்றுத்திறனாளிகள் நலன் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. தாரேஸ் அகமது- தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குனராக இருந்தவர் ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
10. ஜெ.ஜெயகாந்தன்- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராக இருந்தவர் புவியியல் மற்றும் சுரங்கம் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. எல்.நிர்மல்ராஜ்- புவியியல் மற்றும் சுரங்கம் இயக்குனராக இருந்தவர் போக்குவரத்துத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
12. ஜெசிந்தா லாசரஸ்-புலம்பெயர்ந்த தமிழர்கள் நலன் ஆணையராக இருந்தவர் மாற்றுத்திறனாளிகள் நலன் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
13. எஸ்.கோபால சுந்தர ராஜ்- தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் வணிகவரி (பெரும் வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
14. எம்.எஸ்.சங்கீதா-, தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை இணை மேலாண் இயக்குனராக இருந்தவர் வணிக வரி இணை ஆணையராக நியமனம்
15. எஸ்.சிவராசு திருச்சிராப்பள்ளி ஆட்சியராக இருந்தவர் , வணிவகரி, இணை ஆணையர் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார்
16. எம்.மதிவாணன்- மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மபினர் ஆணையராக இருந்தவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
இது போன்று பல்வேறு துறை ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் ஐபிஎஸ் அதிகாரிகளும் மிகப்பெரிய அளவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
