இறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்தது.
இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், மத்திய அரசின் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.  
மேலும் இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தன. அப்போது மத்திய அரசு சார்பில் விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இறைச்சி மாடுகளை விற்பதற்கான தடையை தளர்த்துவது குறித்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மக்களின் கருத்துகள் கேட்டு, விரைவில் புதிய உத்தரவு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைகு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்  இறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கான தடையை ஆகஸ்ட் 22 வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.