புதுக்கோட்டையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்ததில், ஆவுடையார்கோவிலில் அதிகபட்சமாக 37 மிமி மழைப் பதிவானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும், இரவு நேரங்களில் கடும் பனி கொட்டி வந்தது.

வெயிலின் தாக்கத்தால் ஆங்காங்கே சாலை ஓரங்களில் இளநீர், கறும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மேலும் வாகன ஓட்டுனர்கள் முகத்தை மூடியவாறு சென்று வந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளன. நேற்று காலையும் மழை தாரளாமாகவே பெய்தது. இதனால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகளும் களிகூர்ந்தனர்.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், நாகுடி, ஆயிங்குடி பகுதிகளிலும் மழை பரவலாக பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

ஆதனக்கோட்டை - 4 மிமி, பெருநல்லூர் - 6 மிமி, புதுக்கோட்டை - 2 மிமி, ஆலங்குடி - 3 மிமி, அறந்தாங்கி - 5 மிமி, ஆயிங்குடி - 17 மிமி, நாகுடி - 25 மிமி, மீமிசல் – 3 மிமி, ஆவுடையார்கோவில் - 37 மிமி, கந்தர்வகோட்டை - 5 மிமி, இலுப்பூர்- 2 மிமி, அன்னவாசல் - 3 மிமி, கறம்பக்குடி - 17 மிமி, மழையூர் - 8 மிமி, உடையாளிப்பட்டி - 6 மிமி, கீரனூர் - 4 மிமி, மணமேல்குடி - 5 மிமி, கீழாநிலை - 11 மிமி, திருமயம் - 2 மிமி, அரிமளம் - 5 மிமி மழையும் பெய்துள்ளது.