The rule of Yediyurappa will take place 5 years - Famous astrologer prediction

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்றும், பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு நிச்சயம் காவிரி நீர் கிடைக்கும் என்றும் பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது. அதே சமயம் 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, மஜத கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கவும் இந்த கூட்டணி உரிமை கோரியிருந்தது.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு நேற்று இரவு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் விடிய விடிய விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் ஆளுநரின் முடிவில், உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கெண்டார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் அளித்துள்ளார். அப்போது பேசிய எடியூரப்பா 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவே செய்வேன் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில், வேலூரைச் சேர்ந்த பிரசன்ன ஜோதிடர் லோகேஷ் பாபு, எடியூரப்பா, மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார் என்று கூறியுள்ளார். ஜோதிடர் லோகேஷ் பாபு, தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார். அதன்படியே நடந்தது. ஜெ. மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்படும் என்றார். அதுவும் நடந்தது. சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்றார் தினகரனும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். லோகேஷ் பாபு கணித்தது நடந்துள்ளது.

அதேபோல் குஜராத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்து கொள்ளும் என்றார். அதன்படியே நடந்தது. கர்நாடக தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றார் அதுவும் நடந்தது. பாஜகவின் பல்வேறு வியூகங்களுக்கிடையே எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் எடியூரப்பாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பிரசன்ன ஜோதிடர் லோகேஷ் பாபு கூறுகையில், எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார் என்று கூறினார். மேலும் இரண்டு கட்சிகளில் இருநது மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்கள், பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமது பாஜகவுக்கு
ஆதரவளிக்கும் கட்சி இரண்டாக உடையும் என்றும் அந்த கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியும் கிடைக்கும் என்றார். இது எல்லாவற்றையும் விட பாஜக ஆட்சியில் நிச்சயம் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.