Asianet News TamilAsianet News Tamil

திடீரென்று மூடிய மெட்ரோ ரயில் கதவுகள்.. குழந்தையோடு இடுக்கில் மாட்டி அலறிய பெண்.. தர்ணாவில் ஈடுபட்ட பயணிகள்

 மெட்ரோ ரயிலின் ஆட்டோமேட்டிக் கதவுகள் சரியாக இயங்காததால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ நிலையத்திலேயே அமர்ந்து பயணிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

The public protest against metro authority that the automatic doors of the metro trains were not working properly
Author
Chennai, First Published Jun 26, 2022, 12:42 PM IST

சென்னை உயர்நீதிமன்றம் மெட்டோ ரயில்நிலையத்தில், இன்று காலை பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறும் பொழுது திடீரென ஆட்டோமேட்டிக் கதவுகள் மூடியுள்ளது. இதனால் கதவுகளுக்கு இடுக்கில் பிரியா என்ற பெண் தன் குழந்தையோடு நடுவில் மாட்டிக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த சக பயணிகள், துரிதமாக செயல்பட்டு அவரை ரயில் பெட்டிக்குள் உடனடியாக இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் படிக்க:Tamilnadu Corona : மாவட்டங்கள் வாரியாக கட்டுப்பாடுகள் விதிப்பு - மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா ?

அதேபோன்று பிரியா என்ற பெண்ணின் தம்பி மற்றும் மற்றொரு நபரான ரெகேனா என்ற பெண்ணும் இதேபோன்று கதவுகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் கதவுகளுக்கு இடையே மாட்டியதால் கைவலியால் அவதிபட்டுள்ளனர்.தொடர்ந்து புது வண்ணாரப்பேட்டை நிறுத்தத்தில் இறங்கி அந்த பயணிகள் ஒன்றாக சென்று, மெட்ரோ ரயில் ஓட்டுநரிடம் இதுக்குறித்து புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்பொழுது ஓட்டுனர் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக மெட்ரோ ரயிலை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுவர்கள், புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலைய அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, அவர்களும் உரிய பதில் அளிக்கவில்லை என்று சொல்லபடுகிறது.

மேலும் படிக்க:உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டம்.. மாதந்தோறும் ரூ.1000.. ஒரே நாளில் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பம்..

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் புதுவண்ணாரப்பேட்டை ரயில்நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் இடுக்கியில் மாட்டிய ரெகேனா என்ற பெண் பயணியின் கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த பொழுது அவரை மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளே அனுமதிக்காமல் ஊழியர்கள் தடுத்துள்ளனர். 

மேலும் படிக்க:ஆன் லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்.! தடை சட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் -ராமதாஸ்

இதுக்குறித்து கேட்டதற்கு மெட்ரோ நிலையத்தின் நேரம் முடிவடைந்து விட்டதாக கூறியதா சொல்லபடுகிறது. இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான பயணிகள், மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தகுந்த பதிலை அளிக்க வேண்டும் என்றும் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இச்சம்பவத்தால் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரமாக பரபரப்பாக காணப்பட்டது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios