Engineering: பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை எப்போது.? விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் என்ன.?வெளியான அறிவிப்பு
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும், தரவரிசைப்பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியில் படிப்பிற்கான அட்டவணை
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கால அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி Www.tneaonline.org இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்தல், விண்ணப்பங்களை நிரப்புதல், அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் (6.5.2024) இன்று முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க சமர்ப்பிக்க இறுதி நாளை பொறுத்தவரை ஜூன் மாதம் 6 தேதி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாளாக ஜூன் மாதம் 12ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம வாய்ப்பு எண் அதாவது ரேண்டம் எண் ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியிடப்படவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசைப்பட்டியல் வெளியீடு தேதி என்ன.?
சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணியானது ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து தரவரிசை பட்டியல் ஜூலை மாதம் 10 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அரசுப் பள்ளியில் பயின்ற சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு குழுவினருக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு தொடங்கும் என்றும், இதனை தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையதள வாயிலாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் என்ன.?
விண்ணப்ப பதிவு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும், எஎஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் பொறியியல் கலந்தாய்வில் மொத்தமாக 474 கல்லூரிகள் இடம் பெற்று இருந்தன. இதில் இரண்டு லட்சத்து 296 இடங்கள் இருந்த நிலையில், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 887 இடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN 12th Supplementary Exam : 12 ஆம் வுகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு தேர்வு எப்போது.?