The priority in employment for educated students in Tamil course The court order is mandatory to follow

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு, தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேர்வு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனுவில், தான் முதுநிலை வரை தமிழில் படித்ததால், தனக்கு வேலை வழங்கப் படவில்லை என கூறியிருந்தார். 

செந்தில்குமாரின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை என்ற உத்தரவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.