Asianet News TamilAsianet News Tamil

காவலர்களுக்கு கொடுக்கப்படும் மன அழுத்தமே அப்பாவிகள் மீது கோபமாக மாறுகிறது - நீதிபதி கிருபாகரன் வேதனை...!

The pressure given to the policemen becomes angry with the innocent
The pressure given to the policemen becomes angry with the innocent
Author
First Published Mar 19, 2018, 3:24 PM IST


காவலர்களுக்கு கொடுக்கப்படும் மன அழுத்தமே அப்பாவிகள் மீது கோபமாக மாறுகிறது என்று நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

காவலர்கள் மன அழுத்தம் தொடர்பாக பணியை கைவிடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகிவிட்டது. அவர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் முறையீடு செய்தார்.

இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உயர் அதிகாரிகளின் வீட்டில் எவ்வளவு காவலர்கள் வேலை பார்க்கின்றனர் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. 

இது தொடர்பான விவரங்களை வரும் 22-ம் தேதிக்குள் உள்த்துறை செயலாளர்  பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

1979-ல் கொண்டு வரப்பட்ட ஆர்டர்லி முறை ஒழிப்பு அரசாணை என்ன ஆனது எனவும் காவலர்களுக்கு கொடுக்கப்படும் மன அழுத்தமே அப்பாவிகள் மீது கோபமாக மாறுகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

உஷா மரண விவகாரத்தில் மூல காரணம் கணவர் ஹெல்நெட் அணியாததுதான் எனவும் பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்களால் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி நிற்க வைக்கப்படுகிறார்கள் எனவும் குறிப்பிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios