Asianet News TamilAsianet News Tamil

Jallikattu : நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்களுக்கு நிபந்தனை விதித்த போலீஸ்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

The police have imposed conditions on cow handlers for the Avaniyapuram jallikattu competition KAK
Author
First Published Jan 14, 2024, 9:46 AM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் பண்டிகையையொட்டி உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் போட்டியில் பங்கேற்வுள்ள மாடு உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கட்டுப்பாடு விதித்து மதுரை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதன் படி, காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள், அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

The police have imposed conditions on cow handlers for the Avaniyapuram jallikattu competition KAK

மாடு பிடி வீரர்களுக்கு கட்டுப்பாடு

காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது எனவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது. காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது என்றும்  ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 

The police have imposed conditions on cow handlers for the Avaniyapuram jallikattu competition KAK

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டுவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற காளைகள், உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கும்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரசனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

திடீரென சரிந்த வெங்காயம் விலை... உச்சத்தில் நீடிக்கும் அவரை, முருங்கை, கேரட் விலை-கோயம்பேட்டில் காய்கறி விலை ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios