திடீரென சரிந்த வெங்காயம் விலை... உச்சத்தில் நீடிக்கும் அவரை, முருங்கை, கேரட் விலை-கோயம்பேட்டில் காய்கறி விலை ?
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகளவு சொந்த ஊருக்கு சென்றதால் காய்கறிகளை வாங்க பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இதனால் தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது குறைந்துள்ளது.
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவரைக்காய் விலை நிலவரம்
வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், கேரட் 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கத்திரிக்காய் விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாங்காய் விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படியுங்கள்