Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை! எந்த பகுதி என தெரியுமா.?மின்வாரியம் அறிவிப்பு
மின்சார பராமரிப்பு பணிக்காக இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்னையில் ஒரு சில இடங்களில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த எந்த இடங்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார பராமரிப்பு பணி
மின்சாரம் மக்களின் வாழ்க்கையில் ஒன்றிணைந்த ஒன்றாக மாறிவிட்டது. மின்சாரம் இருந்தால் மட்டுமே அன்றைய பணிகளை செய்து முடிக்க ஏதுவாக இருக்கும், தொழிற்சாலைகள், அலுவலங்கள், சமையல் வேலையாக இருந்தாலும் தற்போது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் மின் வெட்டு இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் வகையில் தின்ந்தோறும் ஒவ்வொரு பகுதியில் மின்பாதை சீரமைக்கும் பணியானது நடைபெறுகிறது. இதனால் மின் தடை செய்யப்படவுள்ளதாக முன்கூட்டியே எந்த பகுதியில் மின் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படும். இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,
பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (17.10.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,
பட்டாபிராம்:
மிட்டனமல்லி சிஆர்பிஎஃப் நகர், பிருந்தாவனம் நகர், கேரிசன் இன்ஜினியரிங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
சேலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய பயணிகள் விமான போக்குவரத்து