காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் புதிய விரைவு நீதிமன்றம்-II-ஐச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிய விரைவு நீதிமன்றம்-II கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.

இதனை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவிலேயே, புதிய விரைவு நீதிமன்றம்-II-த்தின் நீதிபதியாக மீனாகுமாரி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..