The new interior secretary Niranjan Mardi - instructed the Secretary-Girija Vaidyanathan Action
தமிழக உள்துறை செயலாளராக இருந்த அபூர்வா வர்மாவுக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டியை நியமித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது உயர்கல்வி துறை செயலாளராக இருந்த அபூர்வா வர்மாவை உள்துறை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளும் இவர் வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி பொருளியல் மற்றும் புள்ளியல் துறை கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதா மறைவையடுத்து எடப்பாடி பழனிசாமி தற்போது முதலமைச்சர் பதவியை வகித்து வருகிறார். இதையடுத்து பல்வேறு அரசு உயர் அதிகாரிகளின் பதவிகள் மாற்றப்படும் என தகவல் வெளியாகின.
அதன் முதற் கட்டமாக தற்போது உள்துறை செயலாளர் மாற்றம் அரங்கேறி உள்ளது.
தமிழக உள்துறை செயலாளர் அபூர்வா வர்மாவை சுற்றுலா துறைக்கு மாற்றி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். தமிழக புதிய உள்துறை செயலாளராக 1986 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான நிரஞ்சன் மார்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேம்பாட்டு கழக இயக்குனராக செல்வி அபூர்வா நியமனம் செய்யபட்டுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குனராக உமாநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
