The mystery mobster is tied to the TV watching Jewelry money robbery ...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தவரை கட்டிப்போட்டு 10 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பலை புகாரின்பேரில் காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நாட்டாண்மை கொட்டாயைச் சேர்ந்தவர் லோகநாதன் (63). இவர் சனிக்கிழமை இரவு வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மூகமுடி அணிந்துவந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் லோகநாதனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரைக் நாற்காலியில் கட்டிப் போட்டனர்.
அப்போது, வெளியில் இருந்து உள்ளே வந்த லோகநாதனின் மனைவி மாதேஸ்வரி, கொள்ளையர்களை பார்த்ததும் வீட்டின் கதவை வெளியே தாளிட்டுவிட்டு உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
ஆனால், அதற்குள், வீட்டிலிருந்து 10 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கண்ணாடியை உடைத்து மர்ம கும்பல் தப்பித்துவிட்டனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை காவலாளர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
