The missing boy is a dead
தஞ்சையில் காணாமல் போன சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சில்கோட்டை அருகே உள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் மருந்து விற்பனையாளராக இருந்து வருகிறார். இவரின் மூத்த மகன் ஸ்ரீஹரி, 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2-வது மகன் கிஷோர், 6 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
கிஷோர், கடந்த 21 ஆம் தேதி முதல் காணவில்லை என சிவக்குமார் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கிஷோர் காணாமல் போனது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது அரவிந்த், கடந்த 21 ஆம் தேதி வீட்டருகே உள்ள மைதானத்தில் கிஷோர் விளையாட வந்ததாகவும். அப்போது தான் மதுபோதையில் இருந்ததாகவும் அரவிந்த் கூறியுள்ளார்.
அப்போது தனக்கும், கிஷோருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், இதில் கிஷோரின் கழுத்தை பிடித்தபோது வலிப்பு வந்து மரணமடைந்ததாகவும் அரவிந்த் போலீசாரிடம் கூறினார். பின்னர் கிஷோரின் உடலை, அங்கேயே புதைத்து விட்டு தப்பித்து சென்றதாகவும் அரவிந்த் கூறினார்.
இதனையடுத்து, கிஷோர் உடல் புதக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அரவிந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
