TN Rains : தமிழகத்தில் இன்று கனமழை.. 12 மாவட்டங்களில் பெய்யும்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

The Metrological dept said heavy rains in 12 districts for the next three hours due to global warming in tamilnadu

தமிழகத்தில் கனமழை :

மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  இன்று தென்தமிழகம் ,கோயமுத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

The Metrological dept said heavy rains in 12 districts for the next three hours due to global warming in tamilnadu

சென்னை வானிலை மையம் :

அதேபோல் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி ,கள்ளகுறிச்சி, திருச்சி, திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளது.

 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ,டெல்டா மாவட்டங்கள் , அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios