Asianet News TamilAsianet News Tamil

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! சென்னையில் குளுமையான நிலை தொடரும் - வானிலை மையம்

வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் 22-23  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

The Meteorological Department said that the low pressure zone has slipped
Author
First Published Nov 22, 2022, 1:12 PM IST

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்

வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கடந்த சில வராங்கள் மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுளது.  மேலும் சென்னையில் தொடர்ந்து குளுமையான வானிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது. 

கூட்டணி கட்சி தலைவர்கள் மீது விமர்சனம்..! பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை

The Meteorological Department said that the low pressure zone has slipped

தமிழகத்தில் மழை எச்சரிக்கை

22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

23.11.2022 மற்றும் 24.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

25.11.2022 மற்றும் 26.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

The Meteorological Department said that the low pressure zone has slipped

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வெப்பநிலை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


மழை அளவு (சென்டிமீட்டரில்)

செஞ்சி (விழுப்புரம்) 2, வளத்தி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை), வந்தவாசி (திருவண்ணாமலை), வல்லம் (விழுப்புரம்) தலா 1.

ஸ்டாலினுக்கு திடீர் கடிதம் எழுதிய சீமான்..! கொலைகளத்திற்கே அனுப்பும் செயல்.. இதை மட்டும் செய்யாதீர்கள்..

The Meteorological Department said that the low pressure zone has slipped

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

22.11.2022: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா,  இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் `சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

பாஜக பெண் தலைவருக்கு ஆபாச அர்ச்சனை..! கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா- அதிர்ச்சியில் அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios