Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rains : உஷார் மக்களே !! தமிழகத்தில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு.. எப்போது தெரியுமா..?

வரும் 28-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

The Meteorological Department has forecast a new depression on the 28th in the southeastern Bay of Bengal and the adjoining Andaman Sea
Author
Tamilnadu, First Published Feb 26, 2022, 6:29 AM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வரும் 28-ம்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

இது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து வரும் நாட்களில் தெரிவிக்கப்படும். 

The Meteorological Department has forecast a new depression on the 28th in the southeastern Bay of Bengal and the adjoining Andaman Sea

கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை கோவை, திருப்பூர்,திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

The Meteorological Department has forecast a new depression on the 28th in the southeastern Bay of Bengal and the adjoining Andaman Sea

தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 26-ம் தேதி மணிக்கு 40 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios