அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் வரும் 16 ஆம் தேதி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொது செயலாளர் சசிகலா மற்றும் அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து கடந்த 1994 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்சஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தனர். இதில் ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனை எதிர்த்து கடந்த 2015 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்திருந்த நிலையில் அவர்கள் இருவரு விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இருவரையும் சென்னை, எழும்புர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த நிலையில், அன்னிய செலாவணி வழக்கில், டிடிவி தினகரன் வரும் 16 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கடந்த 1 ஆம் தேதி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்றைய விசாரணையின்போது, உயர்நீதிமன்றம், டிடிவி தினகரன் வரும் 16 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.