Asianet News TamilAsianet News Tamil

கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

The interim restriction on Karthi Chidambaram will continue
The interim restriction on Karthi Chidambaram will continue
Author
First Published Sep 1, 2017, 12:30 PM IST


கார்த்திக் சிதம்பரம், வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு 90 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தேடப்படும் நபர் மீது அவுட்லுக் சுற்றறிக்கையை மத்திய உள்துறை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக, கார்த்திக் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கார்த்திக் சிதம்பரம் தவறு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட இடைக்கால தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios