வரி ஏய்பு செய்ததாக கூறி முன்னாள் போலீஸ் ஐ.ஜி அருளின் மகன் மைக்கேல் அருள் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் ஒப்பந்ததாரராக இருந்த தியாகராஜன் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி நேற்று முன் தினம் முதல் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதில் 22 கிலோ தங்கம், 41 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இந்நிலையில், முன்னாள் ஐஜி அருள் மகன் மைக்கேல் மீது ரூ. 60  கோடி மதிப்புள்ள சொத்தை ரூ.10 கோடிக்கு விற்று வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து சென்னை அடையாறு போட்கிளப்பில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 
முன்னாள் ஐ.ஜி மகன் மைக்கேல் அருள் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறையின் இந்த அடுத்தடுத்த அதிரடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.