சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்..! அதிரடி நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான  சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Income Tax Department has frozen assets worth Rs 15 crore in the name of a proxy belonging to Sasikala

சசிகலாவிற்கு  சொந்தமான சொத்துக்கள் முடக்கம்

ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலாவிற்கு, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அடுத்தடுத்து சோனைகள் ஏற்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கட்சியும் ஆட்சியும் கையைவிட்டு சென்றது. இதனையடுத்து மத்திய அரசு தங்களது சோதனை நடவடிக்கையில் தீவிரம் காட்டியது. குறிப்பாக 2017 ஆம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு தலைமை செயலகத்தில்  உள்ள தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அறையில் சோதனையையும் மேற்கொண்டது. அப்போது  வருமான வரித்துறை நடத்திய  மிகப்பெரிய அளவிலான சோதனையையில் சசிகலா மற்றும் சசிகலா உறவினர்கள் நண்பர்கள் என சுமார் 150 இடங்களுக்கு சோதனை நடத்தப்பட்டதுஇந்த சோதனையில் பல கோடி ரூபாய் வரியைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணக்கில் வராத பல கோடி ரூபாய் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் 4430 கோடி ரூபாய் வருமான வரி இணைப்பு செய்ததாக வருமானவரித்துறை தெரிவித்திருந்தது. 

The Income Tax Department has frozen assets worth Rs 15 crore in the name of a proxy belonging to Sasikala

4500 கோடி மதிப்பிலான சொத்து

கணக்கில் வராமல் 4500  கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் சொத்துக்கள் வாங்கியது தெரிய வந்தது. மேலும் பல்இடங்களில் பினாமி பெயர்களை சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்திருந்த காரணத்தால் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது.  இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஐந்தாண்டுகளாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தது
இதனையடுத்து ஒவ்வொரு இடங்ககளையும் கண்டறிந்து அந்த ஆவணங்களை கைப்பற்றி முடக்கும்  நடவடிக்கையிலும் வருமானவரித்துறை ஈடுபட்டு வந்தது.2019 ஆம் ஆண்டு 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், இதற்கு அடுத்தபடியாக 300 கோடி ரூபாய் மதிப்பிலான 65 சொத்துக்களையும் வருமான வரித்துறை முடக்கியது. கடைசியாக 2ஆயிரம் கோடி மதிப்பிலான  சிறுதாவூர் பங்களாவையும் முடக்கப்பட்டது

திமுகவிற்கு குட்பாய்? மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்..?

The Income Tax Department has frozen assets worth Rs 15 crore in the name of a proxy belonging to Sasikala

15 கோடி சொத்து முடக்கம்

சுமார் 4 ஆயிரம் கோடி அளவிற்கான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கி வந்தனர். இந்தநிலையில் சென்னை தி. நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது, இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமானவரித்துறையினர் அந்த சொத்தை முடக்கி உள்ளனர். பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான  சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். தற்போது வருமான வரித்துறை அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது
 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் வீட்டு வாசலில் குடுகுடுப்பைக்காரர்கள்.. இனி அவருக்கு நல்ல நேரம் தானாம்.. ஜக்கம்மாவே சொல்லிட்டாங்க.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios