Asianet News TamilAsianet News Tamil

பல வருடமாக இந்த கோயிலை வணங்குறேன்..சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை அதனால பெட்ரோல் குண்டு வீசினேன்- வாக்குமூலம்

4 வருடம் வணங்கியும் கடவுள் தனக்கு எதுவும் தராததால் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக போதை ஆசாமி  போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

The incident of petrol bomb hurling at the Veerabhadran Temple in Chennai created a stir KAK
Author
First Published Nov 10, 2023, 11:35 AM IST | Last Updated Nov 10, 2023, 11:42 AM IST

கோயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னையில் தமிழக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோயிலில் குண்டு வீசப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில்  அமைந்துள்ளது வீரபத்திர சுவாமி கோவில், அதே பகுதியை சேர்ந்த 38  வயதான முரளி கிருஷ்ணன் என்பவர் மது போதையில் கையில் பெட்ரோல் குண்டோடு கோயில் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கோயில் உள்ளே இருந்த பூசாரி அலறி அடித்து வெளியே ஓடி சென்றுள்ளார். இதனை அடுத்த ஒரு சில நிமிடங்களில் கோயில் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

சாமி எதுவும் செய்யவில்லை

அப்போது கோயிலில் வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.  பெட்ரோல் குண்டை வீசிவிட்டு குடிபோதையில் உளரிய முரளி கிருஷ்ணன்,  கடந்த நான்கு ஆண்டுகளாக இக்கடவுளே வழிபட்டு வருவதாகவும். கடவுள் தனக்கு திருப்பி ஏதும் தரவில்லை என கூறி மது போதையில் உளறியுள்ளார்.  இது சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த  கொத்தவால்சாவடி போலீசார் முரளிகிருஷ்ணணை கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

பெரியார், அம்பேத்கர் பற்றி யாராவது தவறாக பேசினால் சும்மா இருக்க மாட்டோம்- அண்ணாமலைக்கு அன்புமணி எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios