The husband hysteria broke the hand of the wife who asked the question ...
ஈரோடு
வீட்டுக்கு குடித்துவிட்டு வந்ததால் கேள்விக்கேட்ட மனைவியின் கையை உடைத்து வெறிச்செயலில் ஈடுபட்ட கணவனை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள பட்டக்காரன்பாளையம் ஓடையக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவர் லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி அன்புக்கரசி (30). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
செந்தில்குமார் எப்போதும் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம். அதேபோன்றுதான் சம்பவத்தன்றும் அவர் போதை தலைக்கேறும் அளவுக்கு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, குடித்துவிட்டு வந்ததற்கு அன்புக்கரசி கேள்வி கேட்டதால் செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், அன்புக்கரசியின் கையை உடைத்துவிட்டார்.
கை உடைந்ததால் வலி தாங்க முடியாமல் அன்புக்கரசி அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பெருந்துறை காவலாளர்கள் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
