திருவாரூர்

எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரினாலும், ஆளுநர் மத்திய அரசின் கருத்தை கேட்டபிறகே எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்வார் என்று சீமான் குற்றம் சாட்டினார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள ஆண்டிபந்தலில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்த சீமான் செய்தியாளர்களுக்கு அதிரடி பேட்டியளித்தார்.

அப்போது அவர், “டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். இதனால் அதிமுக அரசு ஆளும் உரிமையை இழந்துவிட்டது.

தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரினாலும் ஆளுநர் அதை செய்வாரா என்பது கேள்விக்குறியே. ஏனெனில், ஆளுநர் மத்திய அரசின் கருத்தை கேட்டபிறகே எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்வார்.

தமிழகத்தில் அதிமுக கட்சியை உடைப்பதும், சேர்ப்பதும் பாஜக அரசுதான் செய்து வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டன.

தமிழக ஆட்சியாளர்கள் தங்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்ளவும், அணிகளை இணைப்பதிலும் குறிக்கோளாக உள்ளனர்” என்று அவர் கூறினார்.