The Government must emphasize the central government to cancel the hydrocarban project - MLA meiyyanathan

புதுக்கோட்டை

தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி நெடுவாசல் விவசாயிகளை பாதுகாக்கின்ற வகையில் ஐட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை ரத்துச் செய்ய வலியுறுத்தி நெடுவாசல் மக்கள் கடந்த மாதம் 12-ஆம் தேதி இரண்டாம் கட்டமாகப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அதில், ஒவ்வொரு நாளும் வித விதமான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று நெடுவாசலில் 68-வது நாளாக தொடர்ந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திட்டத்தை ரத்துச் செய்ய வலியுறுத்தி கும்மியடித்து போராடினர்.

இந்தப் போராட்டத்தில், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் பங்கேற்றார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, “மத்திய, மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும்.

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி இந்த நெடுவாசல் விவசாயிகளை பாதுகாக்கின்ற வகையில் இந்த ஐட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றம் கூடிய முதல்நாளே நெடுவாசல் ஐட்ரோகார்பன் திட்டம் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளார். அந்தத் தீர்மானத்தை விரைவிலேயே விவாதித்து, நெடுவாசல் ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற அரசை வலியுறுத்துவோம்.

அவ்வாறுக் கொண்டு வராதபட்சத்தில் மு.க.ஸ்டாலின், அடுத்தகட்ட முடிவை அறிவிப்பார். மேலும், இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யும் வரை மக்களோடு இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று அவர் கூறினார்.

ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை எடப்பாடி அரசு வலியுறுத்த வேண்டும் – எம்.எல்.ஏ மெய்யநாதன்…