மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த பெண் செவிலியர் தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர், 72 நாள் சிகிச்சைக்கு பிறகு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தாக அப்போலோ மருத்துவமணை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பல சர்ச்சைகள் வெடித்தன.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அப்போதைய முதலமைச்சராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் முதல் அடிமட்ட தொண்டன் வரை சந்தேகம் எழுப்பினர்.

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இன்று அப்போலோ மருத்துவணையின் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைந்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த செவிலியர்களில் ஒருவர் க்ளோரியாவே. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை ஊழியரான இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற க்ளோரியா, தற்போது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும், கடந்த மாதம் க்ளோரியாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.