The girl fell into the well and died

காஞ்சீபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இவர்களது மகள் ரம்யா (வயது 15). ரம்யா கடந்த 3 வருடமாக திருவண்ணாமலை மாவட்டம் தூசி வாகை கிராமத்தில் உள்ள அவளுடைய பாட்டி முனியம்மாள் வீட்டில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து முடித்தாள். 

அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 456 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி அன்று ரம்யா திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். ரம்யாவை, அவருடைய பாட்டி முனியம்மாள் உறவினர் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் 15 ஆம் தேதி வரை தேடியுள்ளார்.

ஆனாலும், ரம்யாவை கண்டுபிடிக்க முடியாமல், சத்யா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று ஒரு சிறுமியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது காணாமல் போன ரம்யாவின் உடல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ரம்யாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய, செய்யாறில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது ரம்யாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரம்யாவின் மரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள சிறுமி ரம்யா, ஜூன் 14 ஆம் தேதி இரவு தூக்கத்தில் நடந்து சென்றுள்ளா. அப்படி நடந்து செல்லும்போது விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.