தமிழ் நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இவர்கள் பெரும்பாலும் குறிவைப்பது நடுத்தர வர்கத்தினரை தான். இது போன்ற சம்பவங்களால் ஏற்கனவே ஒரு வித பயத்துடன் வாழ்ந்து வரும் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது இப்போது வெளியாகியுள்ள தகவல்.
 
வட மாநிலத்தை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட அதிபயங்கர கொலைக்கார கும்பல் ஒன்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஊடுருவி உள்ளதாகவும், இவர்கள் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பெண்கள் வேடம் அணிந்து வீடுகளில் நுழைகின்றனர்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்பது போன்றோ அல்லது இன்னபிற உதவிகளை கேட்பது போன்றோ வீட்டின் உள்ளே நுழைந்து அவர்களை கொலை செய்து கொள்ளையடிக்கும் அதிபயங்கர கொலைக்கார கும்பல்.

தற்போது இவர்கள் தென்னிந்தியாவிலுள்ள மாநிலங்களில் ஊடுருவியுள்ளனர்.

 மேலும் பெங்களூருவில் பல வீடுகளில் நுழைந்து வீட்டு பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்து கொள்ளையடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 


இப்படி கொலை செய்து கொள்ளையடித்து வந்த ஒரு கும்பல் காவல்துறையில் சிக்கியுள்ளது. ஏனைய கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். 

மேலும் பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது முகம் அறியாத நபர்கள் யார் எந்த உதவி கேட்டு வந்தாலும் வீட்டின் கதவை திறக்க வேண்டாம், சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் அருகிலுள்ளவர்களிடம் உடனே தகவல் கொடுக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.