புரசைவாக்கம் மில்லர் சாலையில், காவலருக்கும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். மில்லர் சாலையில் வரும்போது அங்கு இருந்த போக்குவரத்து காவலர் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் என மாணவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு விதி மீறி வந்துள்ளதாக காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே இரு தரப்பும் மோதிக்கொண்டனர்.

இதையடுத்து போக்குவரத்து உதவி ஆணையர் மீது கல் வீசியதாக 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த மோதலையடுத்து அப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.