‘சுவாமி அருள் உங்கள் மீது உள்ளது, உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்னைக்கு இதுதான் காரணம். இந்த பரிகாரம் செய்தால் உங்கள் வாழ்வு நன்றாக இருக்கும்’, சுவாமி உங்களிடம் பேச சொன்னார் என கூறி, பல ஆண்டுகளாக பல பெண்களின் வாழ்க்கையை நடிகரும், அவரது மகனும் சீரழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாமியார் பெயரைச்சொல்லி பல பெண்களை குறிவைத்து கர்ப்பை சூறையாடியும், பண மோசடி செய்து அவர்களது வாழ்க்கையை சீரழிக்கும் போலி சாமியார் கும்பல் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இந்த வரிசையில் பிரபல நடிகர் ஒருவர், தனது மகனுடன் சேர்ந்து, ‘சுவாமி உங்களிடம் பேச சொன்னார்’ என கூறி பல ஆண்டுகளாக இளம்பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களை சீரழித்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடிகர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவி சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மகள் பெங்களூருவில் ஆசிரியை. இந்த நடிகர் கஜினி, ஏழாம் அறிவு, முரண், புலி வருது, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் மூலம் கடவுள் ஒருவர் பேசுகிறார் என்ற தோற்றத்தை நடிகர் உருவாக்கி உள்ளார். அதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நடிகரின் மகன் வீட்டில் பஜனை நடத்தி சுவாமி உங்களை இது பண்ண சொன்னார், அது பண்ண சொன்னார் என கூறி ஒவ்வொரு பெண்களாக தேர்ந்தெடுத்து பிரசாதமாக ஆகாயத்தில் கையை சுற்றி, விபூதி வரவழைத்து கொடுத்துள்ளார். வாரத்தின் 2வது சனிக்கிழமையில் ஸ்பெஷல் பஜனை நடத்துவார். நடிகரின் மகனை மக்கள் சுவாமிஜி சுவாமிஜி என பக்தியோடு அழைப்பார்கள்.  ஒவ்வொரு வாரமும் இப்படி பஜனை நடக்கும் இடைப்பட்ட நேரத்தில் இன்டர்வியூ என கூறி பெண்களை தனித் தனியாக தனியாக ரூமிற்கு அழைத்து குறைகளை கேட்பார். அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் மனதில் உள்ள கஷ்டங்களை அடுக்கடுக்காக சொல்லி விடுவார். இதை நம்பிய மக்கள், உண்மையாகவே அவர் மீது சுவாமி அருள் இருக்கிறது என நினைத்து அவர் சொல்வதை எல்லாம் செய்வர். அப்படி செய்யும் பெண்களின் தாயிடம் ‘உங்கள் மகளுக்கு இந்த பிரச்னை உள்ளது, இதை செய்தால் உங்களது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து’ என கூறி ஒவ்வொருவரிடமும் பல லட்சம் சுருட்டி உள்ளார்.

இப்படி சுருட்டியபின்பும் கூட பெண்கள் மற்றும் அவரது மகள்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி தனது கற்பழித்துல்ளார்கலாம். மேலும் தங்களது காம லீலைக்கு கட்டுப்படாத பெண்கள் மற்றும் அவரது மகள்களின் பேஸ்புக் போட்டோக்களை எடுத்து பெண்களின் செல்போன் எண்களை பின்தொடர்ந்து அவர்களுக்கு செக்ஸ் டார்ச்சரும் கொடுத்துள்ளார். 

சுவாமிஜி என அழைக்கப்படும் 2008ம் ஆண்டு முன்பு வரை பஜனைக்கு வரும் பெண்களின் குறைகளை தானாக அறிந்து வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பஜனைக்கு வரும் பெண்களின் பிள்ளைகளிடம் ஆசைவார்த்தை கூறி தனது கைக்குள் போட்டுக் கொண்டார். அவர்களிடம் இருந்து குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் மற்றும் குடும்ப சூழ்நிலை, சொத்து விவரம் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொண்டு, பெண்கள் வந்து அருள் கேட்கும் போது இதுதானே உங்க பிரச்னை என்று சொல்லி பெண்களை பூரிப்படைய வைப்பார்.  இதில், விழுந்த பல பெண்கள் அவர் சொல்வதுதான் வேத வாக்கு என நினைத்து, தம் மீது சுவாமி அருள் உள்ளது என நம்பியும், வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.

இப்படி பாதிக்கப்பட்ட பல பெண்கள் போலீசில் புகார் அளித்தாலும், போலீசார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். நடிகர் மற்றும் அவரது மகன் மீது ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அபிராமபுரம் ஆகிய காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்தாம்.

நடிகர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியாமல் இருக்க, அவரது மனைவிதான் காரணம் என்று கூறப்படுகிறது. கடவுளாக நினைத்து நடிகரின் வீட்டில் காலடி எடுத்து வைத்த பெண்களுக்கு கற்பு சூறை போனது தான் மிச்சம். பணம், அதிகாரம் பலம் இருப்பதால் தொடர்ந்து பல பேரை ஏமாற்றி பல கோடி ரூபாயை நூதனமாக ஆட்டையை போட்டுள்ளனர். இதேபோல், பல பெண்களின் ஏடிஎம் கார்டு நம்பரை வைத்து நூதன முறையில் பல லட்சம் மோசடி செய்துள்ளார்.

பஜனைக்கு வந்த ஒரு பெண்ணை ஏமாற்றி நடிகரின் மகன் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். அவர் தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்யவே, நடிகரின் மனைவி செக் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் பணம் வங்கியில் இல்லாததால் செக் திரும்பி வந்துள்ளதாம்... இப்படி பல கொள்மால்களை அந்த நடிகரும் அவரது மகனும் அரங்கேற்றியுள்ளார்களாம்.