தமிழகத்தில் மீண்டும் களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை..! அடுத்த குறி யாருக்கு.? 40 இடங்களில் அதிரடி சோதனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் குவாரிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை இரவோடு இரவாக கைது செய்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 100 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து அடுத்த குறியாக அமைச்சர் பொன்முடி இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரையும் விசாரணைக்கு அழைத்து சென்று திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அமலாக்கத்துறை குறி யாருக்கு.?
இந்த பரபரப்புக்கு மத்தியில் அமலாக்கத்துறையின் அடுத்த குறி யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் சில மணல் குவாரி ஒப்பந்ததாரர்களும் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கினர். கடந்த வாரம் மணல் குவாரி உரிமையாளர்களுக்கு தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் திருச்சி, கரூர், வேலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோத பணம் பறிமாற்றம் தொடர்பான ஆவணங்களும் சிக்கியது.
மீண்டும் களத்தில் அமலாக்கத்துறை
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமலாக்கத்துறை இன்று மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. அதன் படி ஏற்கனவே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ரியல்எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் செய்து வரும் சண்முகம் என்பவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள விஜய் அப்பார்ட்மெண்ட், சரவணா தெரு, திலத்தெருவில் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இதே போல காஞ்சிபுரத்திலும் சோதனையானது தீவிரம் அடைந்துள்ளது.
இதையும் படியுங்கள்