Asianet News TamilAsianet News Tamil

சஸ்பெண்ட் மட்டும் போதுமா...? காவல்துறையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...! 

The driver is not enough just to fire the guards who are on the fire
The driver is not enough just to fire the guards who are on the fire
Author
First Published Jan 26, 2018, 12:57 PM IST


ஓட்டுநரை தீக்குளிப்புக்கு உந்திய காவலர்களை பணிநீக்கம் செய்தால் மட்டும் போதாது எனவும் கொலை வழக்கு பதிய வேண்டும் எனவும் பொதுமக்கள் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சொகுசு ஓட்டல் பகுதியில்  போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரை பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர். 

The driver is not enough just to fire the guards who are on the fire

இதனால் ஆத்திரமடைந்த அந்த மணிகண்டனுக்கும் போலீசாருக்குமிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

விரக்தியடைந்த ஓட்டுநர் மணிகண்டன் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த மணிகண்டன் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசாரின் இந்த அராஜக போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

The driver is not enough just to fire the guards who are on the fire

இதைதொடர்ந்து தகவலறிந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த காவல் ஆணையர் விஸ்வநாதன், சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர், விசாரணைக்கு பின் யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

அதன்படி நான்கு போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

The driver is not enough just to fire the guards who are on the fire

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொதித்தெழுந்த மக்களும் நெட்டிசன்களும் ஓட்டுநரை தீக்குளிப்புக்கு உந்திய காவலர்களை பணிநீக்கம் செய்தால் மட்டும் போதாது எனவும் கொலை வழக்கு பதிய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios