திருப்பூர்

குறித்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தமுடியாததால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கடந்த அக்டோபர் 2016-ல் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களிடமே வைப்புத் தொகையை திருப்பித் தர முடிவு செய்யப்பட்டு தொகையும் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அதன்படி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் வைப்புத்தொகை செலுத்தி இருந்தனர். 

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்கு போட்டியிட பலர் வைப்புத்தொகை செலுத்தி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் குறித்த நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த இயலாத சூழ்நிலையில் இருக்கிறது.

எனவே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகை செலுத்தி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தவர்களிடம் தொகையை திரும்ப வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தவர்களில் சிலர் வைப்புத் தொகையை திரும்பப் பெற்றுள்ளனர். 

மீதமுள்ளவர்களும் உடனடியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைப்புத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.